தமிழகம் முழுவதும் உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில் பல்வேறு பகுதியில் ஒரு சில வார்டு கவுன்சிலர்கள் பதவி ஏர்ப்பிற்கு முன்பே அவர்களின் பணிகளை முதன்மையாக செய்துவருகின்றனர். அதன் வரிசையில் அதிரையும் முதன்மை தாங்கும் என்பது அனைவரும் அறிந்ததே.
இந்நிலையில், அதிரை 24வது வார்டில் போட்டிட்ட அப்துல் மாலிக் அவர்கள் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.
அவரின் தேர்தல் வாக்குறுதிகலில் முதன்மையாக சுகாதார பணிக்கு முன்னுரிமை கொடுத்து தற்பொழுது அந்த வார்டு முழுவதும் ஆங்காங்கே தேங்கி கிடக்கும் குப்பைகளை நகராட்சி ஊழியர்களுடன் இணைந்து சுத்தம் செய்து வருகிறார்.
இது குறித்து அவர் கூறுகையில், இன்னும் ஓரிரு தினங்களில் 24வது வார்டு பகுதிக்கென்று தனி வாட்சப்ப் தொலைபேசி எண் அறிமுகம் செய்து அப்பகுதி மக்கள் நேரடியாக கூற முடியாத பிரச்சனைகளையும், கோரிக்கைகளையும், வாட்சப்ப் மூலம் பெற்று நடவடிக்கை மேற்கொள்ளபோவதாகவும் கூறியுள்ளார்.
