Home » IMO வின் விபரீதங்கள் உஷார் உஷார்!!!!

IMO வின் விபரீதங்கள் உஷார் உஷார்!!!!

by admin
0 comment

அதிரை எக்ஸ்பிரஸ்:-   தொழில்நுட்பத்தின் வளர்ச்சி நாளுக்கு நாள் நாம் நினைத்திடாத வண்ணங்களில் புது புது அறிமுகங்களை வெளியிடப்பட்டு வருகிறது.இந்த தொழில்நுட்ப வளர்ச்சியால் அதை பயன்படுத்துவதில் பல வகையில் நமக்கு இலகுவாக இருந்தாலும் அதனுள் ஒழிந்திருக்கும் விபரீதத்தையும் நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

பண்டைய காலங்களில் மனிதர்களை அனுப்பி செய்தியை,தகவலை சொல்லி வருவார்கள்,அதனுடைய பரிணாம வளர்ச்சி நம்மை பிரம்மிப்பூட்டும் வகையில் தொலைவில் உள்ளவர் நமக்கு அருகில் இருந்து உரையாற்றும் அளவிற்கு வளர்ச்சியடைந்து விட்டது.

வீடுகளில் இருப்பவர்களும்,வெளிநாடுகளில் தொழில் நிமித்தம் இருக்ககூடிய பல சகோதரர்களும்
வீடியோ காலில் பேசுவதற்கு IMO என்ற அப்ளிகேஷனை பயன்படுத்தி வருகிறார்கள்.இந்த IMO நிறுவனம் புதியதாக லைவ் (LIVE) என்ற டூல் பாரை அறிமுகப்படுத்தி உள்ளது.

இதனுடைய விபரீத விளைவு என்னவென்றால் இந்த IMO லைவ் டூல் ஐ கிளிக் செய்தால் நாம் காட்டும் அத்தனை காட்சிகளும் நம்முடைய மொபைல் எண்ணை பதிவு செய்துள்ள அத்தனை நபரும் பார்க்கும் அளவிற்கு விபரீதமானது.

நாம் கேட்காலம் இதெல்லாம் யாரும் போடுவார்களா என்று உள்ளூரில் இருக்கும் அதிகமான பெண்கள் இந்த IMO அப்ளிகேசனை தான் பயன்படுத்தி வருகிறார்கள்.தங்களை அறியாமல் பட்டனை அழுத்திவிட்டால்,அல்லது சிறு குழந்தையிடம் அதிகமான தாய்மார்கள் அழுகின்ற காரணத்தால் தங்களுடைய மொபைலை கொடுத்துவிடுகிறார்கள் இதன் காரணமாக அந்த குழந்தைக்கு தெரியாமல் அந்த லைவ் டூலை கிளிக் செய்தால் நாம் இருக்கும் அத்தனை காட்சிகளும் அனைவரும் பார்க்கும் வகையில் ஆகிவிடும்.

ஆகவே தயவுகூர்ந்து இந்த விடயங்களில் எச்சரிக்கையுடன் இருந்து பழைய வெர்சனாக இருந்தால் பிரச்சினையில்லை.புதிய வெர்சன் பிரச்சனை ஆகவே இதை டெலிட் செய்துவிடுங்கள்.

மேலும் SKYPE APP தற்சமயம் கிளியராக இருக்கிறது.இதனை வீடுகளில் பதிவேற்றம் செய்து IMO வை நீக்கிட சொல்வதன் மூலம் பலவகை இன்னல்களையும்,பிரச்சினைகளையும் தவிர்த்துக்கொள்வோம

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter