17
நாளைய தினம் அதிரை நகராட்சி அலுவலகத்தில் கவுன்சிலர்கள் பங்கேற்கும் மறைமுக தேர்தல் நடைபெறுகிறது. இதில் காலை 9.30 மணிக்கு நகர மன்ற தலைவர் பதவிக்கான தேர்தலும், பிற்பகல் 2.30 மணிக்கு துணை தலைவருக்கான தேர்தலும் நடைபெறுகிறது. இந்நிலையில், திமுக தலைமையக அறிவிப்பு வெளியான பிறகு, அதிருப்தி திமுக கவுன்சிலர்கள் SDPIக்கு ஆதரவு அளிக்க கூடும் என தகவல் உலா வருகிறது. அவ்வாறு நடக்கும் பட்சத்தில் இதனை ஒருங்கிணைக்கும் நபருக்கு துணை தலைவர் பதவி வழங்கப்படலாம் என தெரிகிறது. ஏற்கனவே சில சுயேச்சைகள் தங்கள் வார்டு வளர்ச்சி பணிகள் குறித்து SDPI கட்சியினருடன் ஆலோசனை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.