67
தமிழகத்திலேயே அதிக வருவாய் கிராமங்களை உள்ளடக்கி மிகப்பெரிய தாலுகாவாக பட்டுக்கோட்டை தாலுகா உள்ளது. இதனிடையே அதிரையை தலைமையிடமாக கொண்டு புதிய தாலுகாவை உருவாக்க வேண்டும் என்ற நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என சுற்றுவட்டார மக்கள் வலியுறுத்தி உள்ளனர். இந்நிலையில் அதிரை, புதுபட்டினம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் SDPI சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அதில் பட்டுக்கோட்டை தாலுகாவை பிரித்து அதிரையை தலைமையிடமாக கொண்டு புதிய தாலுகா உருவாக்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தி உள்ளது. முன்னதாக நகராட்சி தேர்தல் அறிக்கையில் அதிரை தாலுகா வாக்குறுதியை SDPI தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.