மஸ்ஜிதுல் இஸ்லாம் நடத்தும் ‘அல்குர்ஆன், சுன்னாவின் பக்கம் திரும்புவோம்’ என்ற ஒருநாள் பயிலரங்கம் வருகிற 6/3/22 ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை காரைக்கால் புதுத்துறை ரோட்டில் உள்ள மஸ்ஜிதுல் இஸ்லாம் பள்ளிவாசலில் நடைபெறுகிறது.
இதில் மதினாவில் இருந்து பேராசிரியர் ஷெய்க் அப்துல் கனி மதனி, ‘ பித்னாக்களை எதிர்கொள்வதில் முஸ்லிம்களின் நிலைப்பாடு’ என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்ற உள்ளார். மேலும் வாணியம்பாடி இப்னு ரஜப் அரபி மற்றும் இஸ்லாமிய கல்வி நிறுவனத்தின் நிறுவனர் ஷெய்க் இம்ரான் மதனி, இஸ்லாமிய அழைப்பாளர் உஸ்தாத் பஷீர் பிர்தவ்ஸி, சென்னை பூந்தமல்லி மஸ்ஜித் அஹ்லே ஹதீஸ் தலைமை இமாம் உஸ்தாத் உவைஸ் உமரி, சென்னை அரும்பாக்கம் மஸ்ஜிதுல் முஸ்லிமீன் தலைமை இமாம் உஸ்தாத் சலாமுல்லாஹ் உமரி, காரைக்கால் மஸ்ஜிதுல் இஸ்லாம் தலைமை இமாம் உஸ்தாத் ஹஸன் அலி உமரி ஆகியோரும் சிறப்புரை ஆற்ற உள்ளனர்.
இந்த ஒருநாள் பயிலரங்கில் கலந்துகொண்டு பயன்பெற வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளனர். இந்த பயிலரங்கம் ஆண்களுக்கு மட்டும் என்பது குறிப்பிடத்தக்கது.