16
அதிரை நகராட்சி மன்ற துணை தலைவர் பதவியை கூட்டணி தர்மத்தையும் மீறி திமுக நகர செயலாளர் இராம.குணசேகரன் கைப்பற்றினார். இதனால் திமுக தலைமையை நம்பி களத்தில் இறங்கிய இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் தில்நவாஸ் பேகம், வெறும் 5 வாக்குகள் பெற்று வீழ்த்தப்பட்டார். இத்தகைய சூழலில் திமுக தலைமைக்கு எதிராக செயல்பட்ட வார்டு கவுன்சிலர்கள் மற்றும் நிர்வாகிகளின் பட்டியல் தலைமைக்கு பறந்துள்ளது. உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்ற பிறகு தலைமைக்கு கட்டுப்படாமல் செயல்பட்ட திமுக அதிருப்தி கவுன்சிலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை பாயும் என எதிர்பார்க்கப்படுகிறது.