நகராட்சி தேர்தல்களில் கட்சி கட்டுப்பாட்டை மீறி கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கிய பதவிகளில் ஆளும் திமுகவினர் போட்டியிட்டதால் கட்சித் தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அதிருப்தியில் இருக்கிறார்.
கூட்டணி தர்மத்தை மீறி பதவி ஆசையில் போட்டியிட்டு கட்சிக்கு அவப்பெயரையும், சங்கடத்தையும் ஏற்படுத்திய கட்சி நிர்வாகிகள் களை எடுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
இந்நிலையில் அதிராம்பட்டினம் நகராட்சியில் துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டதற்கு நகர செயலாளரின் பின்னணியில் மாவட்ட MP தான் காரணம் என்று கைகாட்டும் பட்சத்தில் தலைமையின் நடவடிக்கைக்கு உள்ளாகப்போவது நகர செயலாளரா மாவட்டச் செயலாளரா என்ற பதட்டம் தஞ்சை தெற்கு திமுக உபிகளிடையே பரவி வருகிறது.