அதிரை நகராட்சி மன்ற துணை தலைவர் பதவிக்கு திமுக தலைமையின் ஆதரவோடு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தில்நவாஸ் பேகம் போட்டியிட்டார். அவரை எதிர்த்து திமுக நகர செயலாளர் இராம.குணசேகரன் போட்டியிட்டு திமுக தலைமையின் கூட்டணி தர்மத்தை மீறி வெற்றி பெற்றார்.
தில்நவாஸ் பேகத்திற்கு திமுக தலைமையின் சார்பில் நேரில் ஆதரவு தெரிவித்த முன்னாள் சேர்மன் S.H.அஸ்லம்
இந்நிலையில், தில்நவாஸ் பேகத்திற்கு கூட்டம் கூட்டமாக சென்று பொதுமக்களும், பிற அரசியல் கட்சி நிர்வாகிகளும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.