அதிரையில் கடந்த 1ம் தேதி திமுக நகர நிர்வாகத்தின் சார்பில் திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் கொண்டாடும் முதல் பிறந்தநாள் இது என்பதால் உலகெங்கிலும் உள்ள திமுக தொண்டர்கள் இதனை வெகுவிமர்சையாக கொண்டாடினர். ஆனால் அதிரையில் நடைபெற்ற கொண்டாட்டத்தில் சிலரை தவிர்த்து பிற திமுக கவுன்சிலர்கள் பங்கேற்காமல் புறக்கணித்தனர். இதுகுறித்த விரிவான தகவல் தலைமைக்கு சென்றுள்ளது. இத்தகைய சூழலில் திமுக தலைமை சார்பில் அதிரை நகராட்சி மன்ற துணை தலைவர் பதவிக்கு நிறுத்தப்பட்ட தில்நவாஸ் பேகத்தை கூட்டணி அறத்தையும் மீறி திமுக அதிருப்தி கவுன்சிலர்கள் தோற்கடித்துள்ளனர். தலைமைக்கு கட்டுப்பட மறுத்து உள்ளூரில் தனிநபர் துதிப்பாடும் அதிருப்தி திமுகவினரை கூண்டோடு மு.க.ஸ்டாலினின் நீக்குவாரா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
அடங்க மறுக்கும் அதிரை திமுக! மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா புறக்கணிப்பு!! கூட்டணி தர்மம் மீறல்!! தொடரும் தலைமைக்கு எதிரான செயல்கள்!!
17
previous post