Home » உக்ரைனிலிருந்து அதிரைக்கு வந்த மாணவர்! நேரில் வாழ்த்திய திமுக!! (புகைப்படங்கள்)

உக்ரைனிலிருந்து அதிரைக்கு வந்த மாணவர்! நேரில் வாழ்த்திய திமுக!! (புகைப்படங்கள்)

0 comment

உக்ரையினிலிருந்து அதிரை திரும்பிய மாணவர்களை சந்தித்து வாழ்த்து !

உக்ரைனில் ரஷ்யா தொடுத்துள்ள உக்கிர போரால் மக்கள் வெகுவாக பாதித்து உள்ளனர்.

இந்த போரால் அதிராம்பட்டினத்தில் இருந்து மருத்துவ படிப்புக்காக அங்கு சென்ற மாணவர்களுக்கு உணவு குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள் கிடைக்காமல் கஷ்டப்படுவதாக தகவல் கிடைத்தது.

போரால் பாதிக்கப்பட்ட அதிரை மாணவர்களை ஒன்றினைக்கும் பணியினை அதிரை எக்ஸ்பிரஸ் ஊடக பொறுப்பாளர்கள் சிறப்பாக செய்தனர்.

இதனால் அதிரை மாணவர்கள் பரஸ்பரம், தகவல்களை பரிமாறி கொண்டனர்.

இந்த நிலையில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் உத்தரவின் பேரில் உக்ரைனில் தவிக்கும் தமிழக மாணவர்களை மீட்க துரித நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது.

அதன் பேரில் அங்கு தவித்த தமிழக மாணவர்களை மீட்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு மாணவர்களை மீட்டு வருகின்றனர்.

அதன்படி அதிராம்பட்டினம் தினகரன் நிருபர் செல்வத்தின் மகன் உள்ளிட்ட 3 மாணவர்கள் பத்திரமாக மீட்கபட்டு ஊர் வந்தனர்.

முன்னதாக அதிரை மாணவர்கள் குறித்த தகவலை,வெளிநாடு வாழ் தமிழர்கள் நல ஆணைய அமைச்சர் செஞ்சி மஸ்தானை தொடர்பு கொண்டு அதிரை மாணவர்கள் குறித்த பட்டியலை அதிரை எக்ஸ்பிரஸ் வழங்கி துரித நடவடிக்கை எடுக்க கேட்டு கொண்டது.

அதன்படி வந்திறங்கிய மாணவர்களை அதிரை திமுக நகர பொறுப்பாளர்கள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter