அதிரை நகராட்சி பகுதிகளில் அகற்றப்படும் குப்பைகள் அனைத்து வண்டிப்பேட்டையில் உள்ள குப்பை கிடங்கில் கொட்டப்படுவது வழக்கம். இதனிடையே, நகராட்சி நிர்வாகம் குப்பைகளை முறையாக கையாளாத காரணத்தால் குப்பை கிடங்கு நிறைந்து மலைபோல் குப்பைகள் குவிந்துள்ளன. குப்பைகள் தீயில் எரிவதால் ஏற்பட கூடிய நச்சுக்காற்றை அப்பகுதிவாசிகள் சுவாசிக்க கூடிய அவலமும் தொடர்கிறது. மேலும் அதிரை நகராட்சி பகுதியில் அள்ளப்படும் குப்பைகள் அனைத்தும் எரிபுறக்கரை ஊராட்சிக்குட்பட்ட கிழக்கு கடற்கரை சாலையோரமாகவும் கொட்டப்படுகிறது. இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து விவாதித்து முடிவெடுக்க நகராட்சி மன்ற கூட்டத்தை உடனடியாக கூட்ட வேண்டும் என SDPI 13வது வார்டு உறுப்பினர் பெனாசிரா அஜாருதீன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்த கடிதத்தை நகராட்சி அலுவலரிடம் SDPI மாவட்ட பொருளாளர் ஷேக் தாவூத் தலைமையிலான நிர்வாகிகள் வழங்கினர்.
Big Breaking: தேங்கும் குப்பைகள்! அதிரை நகராட்சி மன்றத்தை உடனே கூட்ட வலியுறுத்தல்!!
120