Home » 10,000 பேருக்கு வேலைவாய்ப்பு: யூடியூப் நிறுவனம்!!

10,000 பேருக்கு வேலைவாய்ப்பு: யூடியூப் நிறுவனம்!!

0 comment

யூடியூப்பில் ஏற்படும் வன்முறை பிரச்சினைகளைக் கட்டுப்படுத்துவதற்காக 10,000 நபர்களைப் பணியில் சோ்க்க உள்ளது.

கூகுள் நிறுவனத்தின் வீடியோ பிரிவு சிறப்பு ஊழியரான சூசன், பத்திரிகை ஒன்றிற்கு பேட்டி அளித்தார். அதில், சிலர் யூடியூபை தவறாக வழிநடத்துதல், கையாளல், தொந்தரவு அல்லது தீங்கு விளைவிக்கும் என்று தெரிவித்தார்.

எனவே 2018-ம் ஆண்டில் வீடியோவில் வரும் தவறாக வழிநடத்துதல் பிரச்சினைகளை களைவதற்கு 10,000 நபர்களைப் பணியில் அமா்த்த இருப்பதாக அவர் தெரிவித்தார்.

யூடியூப் மட்டும் இல்லாமல் பேஸ்புக், கூகுள், போன்ற அனைத்து சமூக வலைதளங்களிலும் வன்முறை பிரசாரம் போன்ற தேவையற்ற பிரச்சினைகளுக்கு பயன்படுத்தப்படுவதாக குற்றம் சாட்டப்பட்டது.

மேலும் குழந்தைகளுக்காகவே யூடியூப் கிட்ஸ் சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. யூடியூப் கிட்ஸ் மூலமாக 37 நாடுகளில் மட்டும் 800 மில்லியன் வீடியோ பார்வைகளைப் பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter