15
அதிரை 11வது வார்டு கவுன்சிலரான இஸ்மாயில் நாச்சியா NKS சரீஃப், காளியார் தெருவில் அமைக்கப்படும் மின்மாற்றி பணிகளை ஆய்வு செய்தார். பின்னர் இதுகுறித்து அதிரை எக்ஸ்பிரஸ் நிரூபரிடம் பேசிய அவர், வரும் கோடைக்காலத்தில் அதிரை நகரில் மின் தடை ஏற்படுவது தடுக்கப்படும் என்றார். குறிப்பாக காளியார் தெரு, நடுத்தெரு மேல்புறம் உள்ளிட்ட பகுதிகளில் புதிய மின்மாற்றி அமைக்கப்படுகிறது. இதன் மூலம் பொதுமக்களுக்கு சீரான மின்சாரம் கிடைக்கும் என கூறினார்.