Home » அதிரையின் மத ஒற்றுமையை யாராலும் கெடுக்க முடியாது! -காங்கிரஸ் சாமி நாரயண சாமி

அதிரையின் மத ஒற்றுமையை யாராலும் கெடுக்க முடியாது! -காங்கிரஸ் சாமி நாரயண சாமி

0 comment

அதிரையின் மத ஒற்றுமையை கெடுக்கும் வகையில் மர்ம விஷமிகள் சுவரொட்டிகளை ஒட்டினர். இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வரும் சூழலில் அதிரை நகர காங்கிரஸ் துணை தலைவர் சாமி நாரயண சாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “இஸ்லாமியர்கள், இந்துக்கள் ஒற்றுமையாக வாழும் பெருமைக்கும் ஒற்றுமைக்கும் சிறந்த எடுத்துக்காட்டான ஊர் அதிராம்பட்டினம். இங்கு அதிகமான முஸ்லீம்களும் இந்துக்களும் இனக்கமாக வாழ்கின்றனர். முஸ்லீம்களுக்கு அதிகமான இந்துகள் நண்பர்களாக,தோழிகளாக, ஆசிரியர்களாக, இருக்கின்றனர். அதேபோல் இந்துக்களுக்கும் இவ்வாறான ஒற்றுமை மிகுந்த அதிரையில், சமீபத்தில் சில சஞ்சலங்கள் மற்றும் சலசலப்புக்கள் ஏற்படுத்திடலாம் என சில தீயசக்திகள் விசம செயல்களால் முகநூல், மற்றும் போஸ்டர் வாயிலாக முற்படுகிறார்கள். இவ்வூர் சமுகநல்லிணக்கத்திற்கு பேர்போன ஊர். எனவே இதனால் இங்கு எள்ளளவும் சலசலப்பை ஏற்படுத்த முடியாது, அவர்கள் எண்ணியது நடக்காது இனியும் அறவே நடக்காது. நம் அண்ணன் தம்பிகளாக சகோதரத்துவத்துடன் கூடிய ஒற்றுமை நமக்கான பலம். நமதூரின் மகத்துவம்” என தனது அறிக்கையில் சாமி நாரயண சாமி குறிப்பிட்டுள்ளார்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter