அதிரை புதுமனை தெருவில் அமைந்துள்ளது சித்தீக் பள்ளிவாசல். இந்த பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தை சிலர் ஆக்கிரமித்து இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சித்தீக் பள்ளிவாசல் நிர்வாகம் சார்பில் வைக்கப்பட்டிருக்கும் அறிவிப்பு பலகையில் ” அதிராம்பட்டினம் கிராம புல எண்: 255/4A-ல் ஒரு ஏக்கர் 54 சென்ட் நிலம் சித்தீக் பள்ளிவாசலுக்காக வஃக்பு செய்யப்பட்டதாகும். இச்சொத்தில் ஒரு சில பகுதிகளை சிலர் சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளதை எதிர்த்து சென்னை வஃக்பு தீர்ப்பாயத்தில் வழக்கு எண்: 0A 45/2018ஆக பதிவு செய்யப்பட்டு தற்போது விசாரணை நடந்து வருகிறது. இச்சொத்தானது இந்த அறிவிப்பு பலகைக்கு கிழக்கு, மேற்கு, வடக்கு மற்றும் தெற்கிலுள்ள காலி நிலங்கள், கட்டிடங்களை உள்ளடக்கியதாகும். வஃக்பு சொத்துக்களை விற்பதும் வாங்குவதும் சட்டவிரோதம். ஆகவே இச்சொத்துக்களை விற்கவோ வாங்கவோ உரிமை இல்லை. மீறுவோர் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும்.” இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிரையில் இந்த நிலத்தை வாங்காதீங்க! பகிரங்கமாக அறிவித்த சித்தீக் பள்ளிவாசல் நிர்வாகம்!!
27
previous post