நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு வென்றவர் கனிஸ்பாத்திமா காமில்.
இவர் தேர்தலுக்கு முந்தைய வாக்குறுதிகளில் முக்கியமான ஒன்றாக வார்டு சுகாதாரத்தில் கூடுதல் கவனம் செலுத்தபடும் என கூறி இருந்தார்.
அதனை தொடர்ந்து வெற்றி பெற்ற காமில் கனிஸ், தமது பகுதியில் நிலவி வரும் சுகாதார பிரச்சனைகளுக்கு முற்றுபுள்ளி வைக்க ஏதுவாக தமது வார்டுக்கென தனி கண்காப்பாளர் மற்றும் துப்புரவு தொழிலாளர்களை நியமிக்க வார்டுக்கு உட்பட்ட முஹல்லா வாசிகளுடன் இணைந்து நகராட்சி ஆணையரிடம் மனு அளித்தார்.
மனுவை பெற்றுக்கொண்ட ஆணையர் சசிகுமார் விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார் .