
இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு எதிராக,முஸ்லிம்களின் உரிமையை பறிக்கும் ஹிஜாப் தடை செல்லும் என்று தீர்ப்பளித்த கர்நாடக உயர்நீதிமன்ற தீர்ப்பை கண்டித்து
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டம் சார்பில் இன்று மாலை அதிராம்பட்டினத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் அதிரை ராஜிக் தலைமை வகித்தார்,மாவட்ட துணை தலைவர் வல்லம் ஜாபர்,மாவட்ட துணைச்செயலாளர் ஆவணம் ரியாஸ் கண்டன கோஷம் எழுப்பினர்,மாநில பேச்சாளர் ஜமால் உஸ்மானி கண்டன உரையாற்றினார்,நிறைவாக மாவட்ட செயலாளர் ஹாஜா ஜியாவுதீன் நன்றியுரை கூறினார்,மாவட்ட பொருலாளர் அப்துல் ஹமீது,
மாவட்ட துணை செயலாளர் அஸ்ரப்,அப்துல்லாஹ் மற்றும் அரபாத் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அதிரை கிளை 1 மற்றும் கிளை 2 நிர்வாகிகள் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தனர்
இதில் ஆயிரக்கணக்கான பெண்கள் குழந்தைகள்,ஆண்கள் உட்பட மூவாயிரத்துக்கும் அதிகமான இஸ்லாமியர்கள் கலந்துகொண்டு உயர்நீதிமன்ற தீர்ப்பை கண்டித்து கோஷமிட்டனர்.