Home » அதிரையில் தேர்தல் முடிந்ததும் உண்மையை மறைத்து பேசுவது முறையல்ல! திமுக கவுன்சிலர்களுக்கு முஸ்லீம் லீக் கண்டனம்!

அதிரையில் தேர்தல் முடிந்ததும் உண்மையை மறைத்து பேசுவது முறையல்ல! திமுக கவுன்சிலர்களுக்கு முஸ்லீம் லீக் கண்டனம்!

0 comment

அதிரை நகர முஸ்லீம் லீக் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “அதிரை 20வது வார்டில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் போட்டியிட்டவர் ஷேக் அப்துல்லாஹ். இவர் தேர்தலில் வெற்றிவாய்ப்பை இழந்தபோதும் தனது வார்டு மக்களுக்கான சேவையை தொடர்ந்து செய்வேன் என கூறியிருந்தார். இதனிடையே தொக்காலிகாடு பகுதியில் சாலை அமைப்பதற்கான திட்டமிடல் பணியை மேற்கொண்ட ஊழியர்களிடம் அங்கு அமைக்கப்பட இருக்கும் சாலை குறித்த தகவல்களை கேட்டறிந்து தரமான சாலை அமைக்க வழியுறுத்தினார். இது குறித்த செய்தி ஊடகங்களில் வெளியாகி மக்களின் பாராட்டுகளை பெற்றது. இதனை பொறுத்துக்கொள்ள முடியாத திமுக கவுன்சிலர்கள் சிலர், அளவை பணி நடந்தது தொக்காலிகாடு ஊராட்சி என்றும் அதற்கும் அதிரை மக்களுக்கும் தொடர்பு இல்லை என்பதை போலவும் கருத்துக்களை வெளியிட்டுள்ளனர். ஆனால் உண்மையில் அந்த குறிப்பிட்ட தொக்காலிகாடு ஊராட்சி பகுதியில் அதிரையின் 9, 10, 20வது வார்டு மக்கள் தான் இருக்கிறார்கள் என்பது சம்மந்தப்பட்ட திமுக கவுன்சிலர்களுக்கு நன்கு தெரியும். நகராட்சி தேர்தல் சமயத்தில் தொக்காலிகாடு ஊராட்சி பகுதியில் திமுகவினர் நடையாய் நடந்தும் ஸ்டிக்கர் ஒட்டியும் ஓட்டுகள் வாங்க பிரச்சாரம் செய்ததே அதற்கு சாட்சி. ஆனால் அந்த உண்மையை மறைத்து விட்டு முஸ்லீம் லீக் வேட்பாளரின் தன்னலமற்ற பொது சேவையை உள்ளாட்சி எல்லையை சுட்டிக்காட்டி திமுக கவுன்சிலர்கள் விமர்சிப்பதை மக்கள் விரும்புவதில்லை. இது மக்கள் நலன் சார்ந்து பயணிக்கும் எந்த ஒரு முஸ்லீம் லீக் தொண்டனையும் சோர்வடைய செய்யாது. அதிரை மக்கள் எந்த ஊராட்சியில் இருந்தாலும் அவர்களின் முன்னேற்றம் நலன் சார்ந்த பணிகளை அதிரை நகர முஸ்லிம் லீக் முன்னின்று செய்யும் என்பதை அழுத்தம்திருத்தமாக தெரிவித்துக்கொள்கிறோம். ஒருவரது பாராட்ட மனமில்லாவிட்டாலும் பரவாயில்லை, நியாயமில்லாமல் உண்மையை மறைத்து விமர்சிக்காதீர்.” என குறிப்பிடப்பட்டுள்ளது.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter