Home » அதிகாரம், மிரட்டல், காசுக்கு விலைபோகாத அதிரை எக்ஸ்பிரஸ்! மக்களின் குரலாய் தொடர்ந்து ஓங்கி ஒலிக்கும்!!

அதிகாரம், மிரட்டல், காசுக்கு விலைபோகாத அதிரை எக்ஸ்பிரஸ்! மக்களின் குரலாய் தொடர்ந்து ஓங்கி ஒலிக்கும்!!

0 comment

2007ம் ஆண்டு அதிரை அல்-அமீன் (பஸ் ஸ்டாண்ட்) பள்ளிவாசலுக்கு ஏற்பட்ட நெருக்கடியை மக்கள் மன்றத்தில் சென்று சேர்க்க செய்ய துவங்கப்பட்டது தான் அதிரை எக்ஸ்பிரஸ். ஆரம்பமே அதிகார அடக்குமுறைக்கு எதிராக சாமானியர்களின் குரலாய் உருவெடுத்த அதிரை எக்ஸ்பிரஸ், தற்போது பறந்து விரிந்த ஆலம்பரம்போல் 15 ஆண்டுகளை கடந்து 16ம் ஆண்டில் அடியெடுத்து வைக்க இருக்கிறது. இந்த 15 ஆண்டுகளில் அதிரை எக்ஸ்பிரஸ் நிருபர்கள் சந்தித்த மிரட்டல்கள், தொல்லைகள் எல்லாம் சொல்லிமாளாது. ஆனாலும் அதிகாரம், மிரட்டல், காசுக்கெல்லாம் விலைபோக கூடாது என்பதில் அதிரை எக்ஸ்பிரஸ் உறுதியாக உள்ளது. எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் நீதியின் பக்கம் நின்று உண்மையை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கும். ஜனநாயக தேசத்தில் மக்களே எஜமானர்கள். அந்த எஜமானர்களுக்கு தேவையான தகவல்களை வழங்கும் மகத்தான பணியை தான் அதிரை எக்ஸ்பிரஸ் செய்கிறது. சத்தியமும் நீதியும் எந்த பக்கம் இருக்கிறதோ அந்த (மக்களின்) பக்கம் அதிரை எக்ஸ்பிரஸ் நிற்கும். அதிகாரம் இருக்கிறது என்பதற்காக தன்னை எவரும் கேள்வி கேட்க மாட்டார்கள் என்ற ஆணவத்தில் வலம்வரும் ஒவ்வொருவருக்கும் அதிரை எக்ஸ்பிரஸ் சிம்ம சொப்பனம் தான். அதிரை மக்கள் அனைத்து உரிமைகளையும் பெற்று வளமாய் வாழ்வார்கள்….

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter