அதிரை SDPI கட்சியின் 9, 10 & 20வது வார்டு பொருப்பாளரான NMS ஷாபிர் அஹமது அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “அதிரை நகராட்சியின் 9, 10, 20வது வார்டுகளை சேர்ந்த பொதுமக்கள் அதிகமானோர் மேலத்தெருவின் விரிவாக்க பகுதியான தொக்காலிகாடு ஊராட்சியின் எல்லைக்குட்பட்ட பகுதியில் வசித்து வருகின்றனர். இதன் காரணமாகவே நகராட்சி தேர்தல் சமயத்தில் அங்குள்ள வீடுகளின் வாசல்களில் ஸ்டிக்கர்களை ஒட்டியும் நேரடியாக பிரச்சாரம் செய்தும் திமுக ஓட்டுக்கேட்டது. ஆனால் தேர்தல் முடிந்ததும் அந்த பகுதி நகராட்சி எல்லையில் வராது என கூறி திமுக கவுன்சிலர்கள் தங்கள் பொறுப்புகளை தட்டிகளிக்க முயல்வது அதிர்ச்சியாக உள்ளது. ஓட்டு வாங்க மட்டும் இப்பகுதி மக்களை திமுக பயன்படுத்தியது இதன் மூலம் வெட்டவெளிச்சமாகிவிட்டது. இதனை எல்லாம் மக்கள் பார்த்துக்கொண்டு தான் உள்ளனர். அப்பகுதி மக்களை வாக்கு வங்கியாக மட்டும் பார்க்காமல் அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து மேலத்தெருவின் விரிவாக்க பகுதியை மட்டும் அதிரையுடன் இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.
மேலத்தெரு முகல்லாவாசிகளை ஓட்டு வங்கியாக மட்டும் பார்க்காதீர்! திமுக கவுன்சிலர்களுக்கு அதிரை NMS ஷாபிர் அஹமது கண்டனம்!!
46