15
பேரூராட்சியாக இருந்த அதிரை தற்போது நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டு வரும் 31ம் தேதியுடன் நிறைவடையும் சூழலில் அதிரை நகராட்சிக்கு நிலுவை வைக்கப்பட்ட சொத்துவரி, குடிநீர் கட்டணம் உள்ளிட்ட வரிகளை மக்கள் விரைவாக கட்ட வேண்டும் என அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர். அதிரை நகரின் மேம்பாட்டிற்கு இந்த வரிகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால் வரும் 31ம் தேதிக்குள் மக்கள் வரிகளை கட்டி நகரின் வளர்ச்சிக்கு பங்களிக்குமாறு கேட்டுக்கொள்ளப் பட்டிருக்கிறார்கள்.