49
அதிராம்பட்டினம் மேலத்தெரு பகுதியில் உள்ள மீராசா அப்பா வீடருகே குடிநீர் குழாயில் உடைப்பெடுத்து நீர் வெளியாகி கொண்டிருந்தது.
இதனை அப்பகுதி மக்கள் நகர சேர்மனின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.
இந்த நிலையில் உரிய அதிகாரிகளை தொடர்பு கொண்ட தாஹிரா அம்மாள் கறிம், போர்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க கேட்டு கொண்டார்.
அதனை தொடர்ந்து விரைந்த அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் உடைப்பை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர்.
-வார்டு நிருபர்-