அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் 97 வது மாதாந்திர கூட்டம் நிகழ்ச்சி தகவல்கள்
தேதி:11/03/2022
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹ்வின் உதவியால் அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் 97-வது மாதாந்திர கூட்டம் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்ச்சி நிரல்:-
கிராஅத் : சகோ. நெய்னா முகமது ( ஒருங்கிணைப்பாளர் )
முன்னிலை : சகோ. A.M.அஹமது ஜலீல் ( செயலாளர் )
வரவேற்புரை : சகோ. நிஜாமுதீன் ( ஆலோசகர் )
சிறப்புரை : சகோ. அஹமது அஸ்ரப் ( துணை தலைவர் )
அறிக்கை வாசித்தல் : சகோ. ஷேக் மன்சூர் ( துணை செயலாளர் )
நன்றியுரை : சகோ. A. சாதிக் அகமது ( இணைத்தலைவர் )
தீர்மானங்கள்:
1) ரமலான் கிட் பங்கு தாரர்களின் அதிக எண்ணிக்கை பெயர்கள் பதிவு செய்யுமாறு கேட்டுகொள்ளபட்டது.
2) WELFARE CREDIT SYSTEM (WCS) விஷயமாக தெளிப்படுத்தப்பட்டு அதனுடைய இரட்டிப்பு நன்மைகளை அடையும் வண்ணம் ஊக்கப்படுத்தப்பட்டது.
3) இன்ஷா அல்லாஹ் வரும் ரமலான் மாத மெகா கூட்டம் நிகழ்ச்சிகள் விஷயமாக ஆலோசிக்கப்பட்டு ஏப்ரல் 15ந்தாம் தேதி வைக்கலாம் என்றும் அதை சிறப்பாக நடத்துவது எனவும் மற்றும் இடம் தேர்வு செய்து பின்னர் அறிவிக்கப்படும் என்று முடிவு செய்யப்பட்டு மேலும் அதன் பொறுப்பாளர்களாக நிஜாமுதீன் அவர்கள் இப்தார்.
மாலிக், சாதிக், ஜெமீல் பித்ரா , சந்தா மற்றும் ஜகாத் தாவா சென்டர் மௌலவி அவர்கள் சிறப்பு பயான் மற்றும் நிகழ்ச்சிகளுக்கு பொறுப்பாளர்கள் நியமிக்கபட்டது.
4) ABM செகரட்டரி அப்துல் ஹமீது காக்கா அவர்களின் மனைவி மறைவிற்கு இரங்கல் தீர்மானம் மற்றும் எல்லோரும் துஆ செய்யுமாரு கேட்டுக்கொள்ளப்பட்டது..
5) கடந்த 07-03-2022 அன்று தலைமையகத்தில் புதிதாக தேர்ந்து எடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகள் பணி சிறக்க வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.
6) இன்ஷா அல்லாஹ் அடுத்த 98-வது அமர்வு APRIL மாதம் 15-ம் தேதி வெள்ளிக்கிழமை நடைபெறும். அதில் அதிரை வாசிகள் அனைவரும் கலந்து கொண்டு ஆதரவு தருமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்பட்டு கூட்டம் இனிதே நிறைவு பெற்றது.
ஜஸாக்கல்லாஹ் ஹைரன்


