
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் சகோதரர் அபூபக்கர் தலைமையில் (ADIRAI TREE PROJECT, an ESA Mission) அதிரை மரம் வளர்ப்பு திட்டம், ஒரு ஈஸா இலக்கு என்ற பெயரில் இயற்கை சுற்றுச்சூழலை சரிசெய்யும் வகையில் ஜூன் 2021 முதல் இன்று வரை செயல்படுகிறார்கள் –
இதுவரை 2 குளங்கள், 1 அனாதை இல்லம், 1
கோவில், 1 மஸ்ஜித், 1 மத்ரஸா, 1 அரசு கல்லூரி, 1 அரசு மற்றும் 1 தனியார் மருத்துவமனையை சுத்தம் செய்து அங்கெல்லாம் பனை, அத்தி, பலா, சீத்தா, மாமரக்கன்றுகள் என மொத்தம் 1200 பனை விதைகள், 500 சீத்தா விதை பந்துகள் (இயற்க்கை உரம், மண் உடன் செய்த விதை பந்துகள்), 110 மாமரக்கன்றுகள், 60 பலா மரக்கன்றுகள், 4 அத்தி மரக்கன்றுகள், 12 சீத்தா மரக்கன்றுகளை இடம் மாற்றம் செய்யுதல் (Shifting the trees) சரி இல்லாத இடங்களிலிருந்து சரியான இடத்திற்கு மரக்கன்றுகளை கொண்டுவருதல். முன்னாள் பேரூராட்சி உதவியுடன் பிளாஸ்டிக் பொருட்களை மக்கும் குப்பை மக்காத குப்பை என பிரித்துக்கொடுத்திருக்கிறோம்.
துப்புரவு பணிக்குப் பிறகு, நாங்கள் அரசு மருத்துவமனையிலிருந்து 40 பீர் பாட்டில்களும், கோவில் அருகில் 15 பீர் பாட்டில்களும், 100 க்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் கேரி பேக்குகள் & கோப்பைகள் பிரித்து துப்புரவு பணியாளரிடம் வழங்கப்பட்டன. மேலும், 25க்கும் மேற்பட்ட பூரான் பூச்சிகள் வெளியே வீசப்பட்டதையும்,
சுத்தம் செய்யும் போது 3 பாம்புகள் அரசு மருத்துவமனையிலிருந்து கழிவுநீர் தொட்டியில் ஓடியதையும் கண்டறிந்துள்ளோம். மரக்கன்றுகள் கீழே விழாமல் மற்றும் கால்நடைகளிருந்து பாதுகாக்க, பழைய கழிவு டயர்களை பசுமை வலை உறைக்கு பயன்படுத்தினோம்.
குடியரசு தின சிறப்பு நிகழ்வாக அதிரை மரம் வளர்ப்பு திட்டித்தின்படி பழைய 100 டயர்களை இந்திய கொடியின் பச்சை, வெள்ளை மற்றும் ஆரஞ்சு நிறத்தில் பெயிண்ட் அடித்து மண், உரம் சேர்த்து அதில் பூ செடிகள், துளசி மற்றும் மூலிகை செடிகள் அதிரை அரசு மருத்துவமனையில் வைத்திருக்கிறோம்.
காதிர் முகைதீன் மற்றும் இமாம் ஷாபி மேல் நிலைப் பள்ளிகளில் சகோதரர் அபூபக்கர் அவர்கள் சுற்றுச் சூழல் விழிப்புணர்வு நிகழ்வு நடத்தி மாணவர்களை
மரக்கன்று நடுவதற்கும் ஆர்வப்படுத்திருக்கிறார்.
அதிரை முழுவதும் 2 லட்சம் மரக்கன்று நடுவதற்கும்
ஈஸா இலக்கு சகோதரர் அபூபக்கர் தெரிவித்தனர்








