57
அதிராம்பட்டினம் அடுத்த பழஞ்சூர் கிராமத்தை சேர்ந்த தொழிலதிபர் செல்வம் திமுகவின் கலை இலக்கிய பண்பாட்டு பேரவையின் அமைப்பாளராகவும் இருந்து வருகிறார் இவர் துபாயில் முன்னனி நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்.
இதுதவிர தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் வணிக வளாகம் உள்ளிட்ட தொழிற்சார்ந்த நிறுவனங்களும் இருக்கின்றன
இந்த நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு முறை பயணமாக துபாய் சென்றுள்ளார், பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட அவர் அங்கு நடைப்பெற்று வரும் தொழில் கண்காட்சியில் தமிழக அரங்கை நேற்று தொடங்கி வைத்து உரையாற்றினார்.
அப்போது தமிழகத்தில் இருந்து அமீரகம் சென்று தொழில் முனைந்து வரும் தமிழர்கள் கலந்து கொண்டனர்.
அந்த நிகழ்வில் அதிரையை அடுத்த பழஞ்சூர் செல்வம் கலந்து கொண்டார்.