Home » மல்லிப்பட்டிணம் தீனியாத் மக்தப் மதராஷாவின் ஆறாம் ஆண்டு விழா(படங்கள்)..!

மல்லிப்பட்டிணம் தீனியாத் மக்தப் மதராஷாவின் ஆறாம் ஆண்டு விழா(படங்கள்)..!

by admin
0 comment

மல்லிப்பட்டினம் சமுதாய நலமன்றம் நடத்தி வரும் தீனியாத் மக்தப் மதரசா 6ஆம் ஆண்டுவிழா நிகழ்ச்சி நேற்று(மார்ச்.26)மிக சிறப்பாக நடைபெற்றது.

இவ்விழாவிற்கு ஜமாஅத் தலைவர் கமரூதீன் தலைமை வகித்தார்.ஜமாஅத் துணைத்தலைவர் அப்துல் ஹமீது,ஜமாஅத் துணை செயலாளர் ஹாரிஸ் அகமது,ஜமாஅத் பொருளாளர் அப்துர் ரஹ்மான்,தலைமை குழு சகாப்தீன்,பேராசிரியர் சேக் அப்துல் காதர்,சமுதாயநலமன்ற தலைவர் அப்துல் ஹலீம்,நிறுவனர் முகமது ரஃபி, ஜமாஅத் உறுப்பினர்கள் சேக்ஜலால்,முகமது ராஃபிக்,முகைதீன் பிச்சை மற்றும் மக்தப் மேம்பாட்டு குழு இப்ராகிம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தீனியாத் ஆசிரியர் முகமது நசீம் கிராஅத் ஓதினார்.ஜமாஅத் செயலாளர் அசன் முகைதீன் வரவேற்புரை நிகழ்த்தினார்.

தலைமை இமாம் முகமது கௌது ஆலிம்,முகமது சபியுல்லாஹ் பாகவி,மௌலானா இமாதுதீன்,அகமது ஜலாலுதீன் ரஹ்மானி,ஆலிம் கலந்தர் செய்யது முகமது பிலாலி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.இந்நிகழ்வில் நாகை மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை மாவட்டதலைவர் ஆலிம் சாகுல் ஹமீது பாகவி சிறப்புரையாற்றினார்.

மக்தப் மதராஷா மாணவர்களுக்கு காலை முதலே போட்டிகள் விறுவிறுப்புடன் நடைபெற்றது.இதில் வெற்றி பெற்றவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.மேலும் போட்டியில் கலந்துக்கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

மேலும் இந்நிகழ்விற்கு ஜூம்மா பள்ளி ஜமாத் நிர்வாகிகள், மதரசா இமாம்கள்,சமுதாய நல மன்ற உறுப்பினர்கள் ,தலைமைகுழு உறுப்பினர்கள் ,மல்லிப்பட்டிணம் ஜமாத்தார்கள்,மதராஸா மாணவ, மாணவிகள் மற்றும் பெண்கள் திரளாக கலந்துக்கொண்டனர்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter