வானுயர எழுந்து நிற்கும் கம்பீர மினாரா,சுமார் 110அடி கொண்ட இந்த மினாராவை தன்னகத்தே கொண்டுள்ள மஸ்ஜிதே தக்வா எனும் பள்ளி துலுக்கா பள்ளி ட்ரஸ்டின் கீழ் வஃக்பு வாரியக் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிக்கென சொத்துக்கள் ஏராளமாக உள்ளது . இதனை தனியார்கள் ஆக்கிரமிப்பு செய்து பள்ளிக்கு வாடகை செலுத்தாமலும், சிலர் சொற்ப வாடைகயை செலுத்தியும் வந்துள்ளனர்.
இந்த நிலையில் கடந்த மூன்றாண்டுகளுக்கு முன்னர் தொழிலதிபர் M.S. ஷிகாபுதீன் தலைமையில் அமைந்த நிர்வாக குழு சிறப்பாக செயல்பட்டு வருகின்றது. மார்க்கெட் நிர்வாகம் சீரமைப்பு, ஜனாசா புதைக்கும் இடம் விஸ்தரிப்பு, பள்ளி புனரமைப்பு என தொடர் பணிகளின் பால் முடுக்கி விடப்பட்டுள்ளது.
இதனை நன்கு கவனித்த வஃக்பு வாரிய அதிகாரிகள், நிர்வாகிகளை நேரில் அழைத்து விபரங்களை கேட்டறிந்தனர். தொடர் பணிகள் தொய்வின்றி தொடர இக்குழுவை 2025ஆண்டு வரை செயல்பட அனுமதியளித்து வஃக்பு வாரியம் சார்பில் ஆணை ஒன்றை பிறப்பித்து அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.


