பஹ்ரைனில் ஹிஜாப் அணிந்து வந்து பெண்ணிற்கு இந்திய உணவகம் அனுமதி மறுத்ததைத் தொடர்ந்து, உணவகத்தை மூட அந்நாடு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
இது தொடர்பாக பஹ்ரைன் சுற்றுலா மற்றும் கண்காட்சி ஆணையம் (பிடிஇஏ) விசாரணையைத் தொடங்கியுள்ளது. பஹ்ரைன் தலைநகர் மனாமாவின் அட்லியா பகுதியில் அமைந்துள்ள லான்டர்ன்ஸ் உணவகத்தில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

இந்நாட்டின் சட்டங்களை மீறும் கொள்கைகளைச் செயல்படுத்துவதை உணவகங்கள் தவிர்க்க வேண்டும் என பிடிஇஏ கேட்டுக் கொண்டுள்ளது. “மக்களை குறிப்பாக அவர்களின் தேசிய அடையாளத்தை வைத்து பாகுபாடு காட்டும் அனைத்து செயல்களையும் நாங்கள் நிராகரிக்கிறோம்” என ஆணையம் தெரிவித்துள்ளது.
சுற்றுலா தொடர்பான நிறுவனங்கள் தொடர்பான 1986 ஆம் ஆண்டின் ஆணைச் சட்ட எண் 15 இன் படி உணவகத்தை மூடிவிட்டதாக ஆணையம் மேலும் கூறியது.
இது தொடர்பாக சமூக வலைதளத்தில் வருத்தம் தெரிவித்துள்ள லான்டர்ன்ஸ் உணவகம், பெண்ணிற்கு அனுமதி மறுத்த மேலாளர் பணியிடை நீக்கம் செய்திருப்பதாக கூறியுள்ளது.
கடந்த 35 ஆண்டுகளாக அழகான பஹ்ரைன் நாட்டில், நாங்கள் அனைத்து நாட்டினருக்கும் சேவை வழங்கி வருகிறோம் என்பதை அறிய லான்டர்ன்ஸ் அனைவரையும் வரவேற்கிறோம்.” என இன்ஸ்டாகிராமில் அந்த உணவகம் பதிவிட்டுள்ளது.
மேலும், ஒரு நல்லெண்ண செயலாக மார்ச் 29 தேதி பஹ்ரைன் குடிமக்களுக்கு இலவச சேவை வழங்கப்படும் என லான்டர்ன்ஸ் உணவகம் தெரிவித்துள்ளது.