மதுக்கூர் பகுதியில் பேரூராட்சியில் திறந்துவிட கூடிய குடிநீர் வினியோகம், நோன்பு மாதத்தில் மாலை நேரத்திலும் திறந்து விட வேண்டும் என்று கோரிக்கை தமுமுக & மனிதநேய மக்கள் கட்சியின் நிர்வாகிகள் இடத்தில் பொதுமக்கள் தெரிவித்து இருந்தனர்.
அதன் அடிப்படையில் இன்று மதுக்கூர் பேரூராட்சி அலுவலகத்தில், செயல் அலுவலர் அவர்களை சந்தித்து, மதுக்கூர் பேரூராட்சி மன்ற 8வது வார்டு உறுப்பினர் சகானா Er.இலியாஸ் அவர்களின் முன்னிலையில் பேரூராட்சி செயல் அலுவலரிடம் “நோன்பு மாதத்தில் மாலை நேர குடிநீர் திறந்து விட வலியுறுத்தி” மனு வழங்கப்பட்டது.
கோரிக்கையினை ஏற்று நோன்பு மாதத்தில் மாலை நேர தண்ணீர் திறந்து விட நடவடிக்கை மேற் கொள்ளப்படும் என தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் தமுமுக மமக மாவட்ட பொறுப்பு குழு தலைவர் ஃபவாஸ், மமக பேரூர் கழக செயலாளர் தாஜுதீன், முன்னால் பேரூர் கழக தலைவர் முஜிபுர் ரஹ்மான், ஊடக அணி மாவட்ட செயலாளர் அப்துல் ரஹ்மான் மற்றும் நசாரூதீன் ஆகியோர் உடன் இருந்தனர்.
