தமிழ்நாடு அரசின் மாநில சிறுபான்மையினர் ஆணையம் சார்பில் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றது. அந்த வகையில் தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் MKN மதரஸா அறக்கட்டளையின் கீழ் இயங்கி வரும் காதிர் முகைதீன் கல்லூரியில், தமிழ்நாடு அரசு அனைத்துக் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டிகள்-2022-க்கான துவக்க விழா இன்று 29.03.2022 காலை 10.00 மணியளவில் கல்லூரி கலையரங்கத்தில் நடைப்பெற்றது.
நிகழ்ச்சிக்கு ஹாஜி.ச.முஹம்மது மீராசாஹிப் தலைமை வகித்தார். கலைப்புல முதன்மையர் மற்றும் பேச்சுப்போட்டி தஞ்சாவூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பேரா.கா. செய்யது அகமது கபீர் வரவேற்புரையாற்றினார். கல்லூரி முதல்வர் முனைவர்.அ.முகம்மது நாசர் அறிமுகவுரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணைய, தமிழ்ப் பேச்சுப்போட்டி மாநில ஒருங்கிணைப்பாளருமாகிய பேரா.முனைவர்.ஜெ.ஹாஜா கனி நோக்கவுரையாற்றினார். தஞ்சாவூர் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ். பழனிமாணிக்கம் போட்டிகளை துவங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.
இதில் தஞ்சாவூர் மாவட்ட கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் பேரா.முனைவர்.தி.அறிவுடை நம்பி, அதிராம்பட்டினம் நகர்மன்ற தலைவர் எம்.எம்.எஸ்.தாஹிரா அம்மாள், அதிராம்பட்டினம் நகர்மன்ற துணைத்தலைவர் இராம.குணசேகரன், கல்லூரி துணை முதல்வர் பேரா.முனைவர்.நெ.மு.இ.அல்ஹாஜி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
இவ்விழாவில் அறக்கட்டளை உறுப்பினர்கள், பேராசிரிய, பேராசிரியைகள், அலுவலக ஆய்வகப் பணியாளர்கள், மாணவ, மாணவியர்கள் மற்றும் உள்ளுர் பிரமுகர்கள் கலந்து கொண்டனர். நிறைவாக, தமிழ்த்துறைத் தலைவர் பேரா.முனைவர்.அ. கலீல் ரஹ்மான் நன்றியுரை வழங்கினார். பல்வேறு கல்லூரிகளைச் சார்ந்த நூற்றுக்கும் அதிகமான மாணவர்கள் கலந்துக் கொண்டனர்.


