அதிராம்பட்டினம் MKN மதரஸா டிரஸ்டின் கீழ் காதிர் முகைதீன் கல்லூரி(இருபாலர்) இயங்கி வருகிறது. இந்நிலையில் அதிரை பிலால் நகரில் உள்ள கல்லூரிக்கு சொந்தமான கட்டிடத்தை புதுப்பித்து காதிர் முகைதீன் பெண்கள் கல்லூரி தொடங்கப்பட்டுள்ளது. மாணவிகளுக்காக பிரத்யேகமாக தொடங்கப்பட்டுள்ள இக்கல்லூரியிலேயே, அனைத்துத்துறை மாணவிகளுக்கும் வகுப்புகள் நடைபெறும் என கூறப்படுகிறது.
மாணவிகளுக்கு பிரத்யேகமாக தொடங்கப்பட்டுள்ள காதிர் முகைதீன் பெண்கள் கல்லூரியை, தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ். பழனிமாணிக்கம் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். அப்போது MKN மதரஸா அறக்கட்டளையின் செயலர் S. முஹம்மது மீராசாகிப், காதிர் முகைதீன் கல்லூரி முதல்வர் முனைவர். முஹம்மது நாசர், துணை முதல்வர் முனைவர். அல்ஹாஜி, நகரமன்ற தலைவர் M.M.S. தாஹிரா அம்மாள், நகரமன்ற துணைத்தலைவர் இராம. குணசேகரன், அரபித்துறை தலைவர், பேராசிரியர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.




