அதிரை நகராட்சி மன்றத்தின் முதல் கூட்டம் கடந்த 28ம் தேதி நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்ற SDPI 13வது வார்டு கவுன்சிலர் பெனாசிரா அஜாருதீன், 6 தீர்மானங்களின் மீது கேள்விகளை தொடுத்ததோடு சில கோரிக்கைகளையும் வலியுறுத்தினார். அதன்படி அதிரை நகராட்சி வெளியிட கூடிய டெண்டர்களில் வெளிப்படைத்தன்மையும் அதிரை பொறியாளர்களை ஒப்பந்ததாரர்களாக பதிவு செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினார். அதேபோல் டெங்கு கணக்கெடுப்பு பணியில் இஸ்லாமியர்கள், விதவைகள், கணவரால் கைவிடப்பட்டோருக்கு முன்னுரிமை வழங்க வேண்டும், பேருந்து நிலையத்தில் உள்ள நகராட்சி கடைகளுக்கான வாடகையை நிர்ணயம் செய்த பிறகு டெண்டர் விட வேண்டும் என்றும் பெனாசிரா அஜாருதீன் கேட்டுக்கொண்டார். மேலும் வாகனங்கள் நிறுத்துமிடம், நகராட்சிக்கு கணினிகள் வாங்குவது தொடர்பாகவும் கேள்விகளை எழுப்பினார்.
அதிரை நகராட்சி பணியில் இஸ்லாமியர்களுக்கு இட ஒதுக்கீடு! உள்ளூர் பொறியாளர்களை பதிவு செய்க!! அசராமல் கோரிக்கைகளை அடுக்கிய கவுன்சிலர்!
116