இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைமை நிர்வாகம் அறிவுறுத்தல் பிரகாரம் அதிராம்பட்டினம் பேருந்து நிலைய வளாகத்தில் எரிபொருள் விலை உயர்வுக்கு எதிரான க்ண்டன ஆர்ப்பாட்டம் நகர தலைவர் தமீம் அன்சாரி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இந்த கண்டன ஆர்பாட்டத்தில் சமையல் எரிவாயு உருளைக்கு மாலை அணிவித்து நூதன போரட்டத்தில் ஈடட்டனர்.
இப்போராட்டத்தில் டெரிவேர் இப்ராஹிம், செந்தமிழ் சுடர் கஜ்ஜாலி ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர்.
முன்னதாக நகர தலைவர் தமீமுன் அன்சாரி வரவேற்று பேசினார். இந்த போராட்டத்தில் நகர துணை தலைவர் நாராயண சாமி நகர பொருளாளர் கட்டபொம்மன் நகர சிறுபானமை தலைவர் டியா மாலீக், நவாஸ்,முனாஃப்,சாகுல் ஹமீது உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு கண்டன கோசங்களை எழுப்பினர்.