நாம் மனிதர் கட்சி உறுப்பினரான கேரள மாநிலத்தை சேர்ந்த ஃபெரோஸ் என்பவர் இயற்கை வீட்டு வழி விவசாயத்தை வெற்றிகரமாக செய்து வருகிறார். அது மட்டுமின்றி இயற்கை வீட்டு வழியில் மீன்களை வைத்து விவசாயம் செய்வது பற்றியும் அனைத்து ஊர்களுக்கு சென்றும் பொதுமக்களுக்கிடையில் விளக்கி வருகிறார்.
பொதுவாக இயற்கை விவசாயத்தில் கிடைக்கும் சில காய்கறிகளை வியாபார நோக்கத்துடன் கார்ப்பரேட் நிறுவனங்கள் எண்டோசல்ஃபான் எனப்படும் ரசாயனக் கலவையை தெளித்து அதன் மூலம் சந்தைக்கு விரைவாக கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். இப்படிப்பட்ட நச்சு தன்மை வாய்ந்த காய்கறிகளை நாம் வீட்டில் உபயோகிப்பதன் மூலம் எளிதில் நோய் எதிர்ப்பாற்றல் கணிசமாக குறைகிறது. இதனால் பெரிய நோய்கள் உண்டாகுவதற்கு இது முக்கிய அடித்தளமாய் அமைகிறது.
ஆனால் இந்த இயற்கை வீட்டு வழி விவசாயத்தில் மீன் தொட்டிகள் மூலம் மீன் கழிவுகளை வைத்து எந்த நஞ்சும் இல்லாத காய்கறிகளை விளைவிப்பதையே இவர் நோக்கமாக கொண்டு செயல்பட்டு வருகிறார்.
இதில் வெற்றி கண்ட இவர் அதிரையில் நேற்று (8-12-2017) அன்று இது குறித்து பத்திரிக்கையாளர்கள் மத்தியில் விளக்கமளித்துள்ளார்.
அதன் வீடியோ (கானொளி) விரைவில் பதியப்படும்…
இனைந்திருங்கள் அதிரை எக்ஸ்பிரஸ்வுடன்…