
அதிராம்பட்டினம் கடைத்தெரு கிராணி முக்கம் ஒன்றில் இயங்கிவரும் தனியார் விடுதியில் இருந்து வெளியேறும் கழிவு நீர்கள் முறையான வடிகால் வசதியின்றி உள்ளது.
சிறிய கால்வாய் வழியே வெளியேறும் நீர்கள் முறையாக பராமறிக்காமல் அவ்வபோது சாலைகளை ஆக்கிரமிப்பது வாடிக்கை.
இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் மின்கம்பம் நடுவதற்கு தோண்டப்பட்ட பள்ளத்தால் குடிநீர் குழாய் உடைப்பெடுத்து குடிநீர் சாலைகளில் ஓட தொடங்கியது.
இதனை சரிசெய்ய நகராட்சி ஊழியர்கள் பள்ளம் தோண்டி சரி செய்ததாக தெரிகிறது.
பள்ளம் தோண்டிய மணல் கால்வாயை ஆக்கிரமம் செய்துள்ளதால் கழிவு செல்லும் பாதை அடைபெடுத்து சாலைகளை கழிவு நீர்கள் சூழ்ந்துள்ளது.
இதனால் அவ்வழியே செல்லும் பள்ளி கல்லூரி மாணவர்கள், வணக்கஸ்தலம் செல்கும் பக்தர்கள் மிகுந்த கஷ்டத்திற்கு உள்ளாகிறார்கள்.
எனவே சுகாதார அதிகாரிகள் தலையிட்டு நிரந்தர தீர்வை வழங்கிட அப்பகுத்தி வியாபாரிகள் கோரிக்கை வைக்கின்றனர்.
