53
அதிரை ஒற்றுமை நலச்சங்கம் (AUWA) சார்பில் சாமியானா பந்தல், நாற்காலிகள், LED மின் விளக்குகள், தேனீர் கேன், ஜெனரேட்டர் ஆகிய சேவைகள் அதிரை மக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஆதம்நகர் இளைஞர் நற்பணி சங்கம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் 2ஆம் ஆண்டு கிராஅத் மற்றும் பயான் போட்டிக்கு அதிரை ஒற்றுமை நலச்சங்கம் சார்பில் இந்த சேவை இலவசமாக வழங்கப்பட்டது. இந்த சேவையை பயன்படுத்த விரும்புவோர் தன்னார்வலர்களான நிஜார் , சி.அகமது ஆகியோரை 96593 44703, 80563 22376 என்ற அலைப்பேசி எண்களில் தொடர்புகொள்ளுமாறு அதிரை சா.சம்சுல் ரஹ்மான் கேட்டுக்கொண்டுள்ளார்.