
கடந்த ஆண்டு ரமலானில் அதிரை எக்ஸ்பிரஸ் நடத்திய இணையவழி இஸ்லாமிய மார்க்க கேள்வி பதில் போட்டியில் அதிரையை சேர்ந்த ஜெ. அஸ்ரா பர்வீன் முதலிடம் பெற்று தங்க நாணயம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனியின் பாராட்டு கடிதத்தை வென்றார். இந்நிலையில் இந்த ஆண்டு அதிரை எக்ஸ்பிரஸ் ஊடகம், நவரத்தினா தங்கமாளிகை மற்றும் டெரிவியர் ஆடையகம் இணைந்து இணையவழி இஸ்லாமிய மார்க்க கேள்வி பதில் போட்டியை நடத்துகிறது. இதுகுறித்து கருத்து தெரிவித்த அதிரை அஸ்ரா பர்வீன், ரமலான் பிறை 01 முதல் பிறை 20 வரை நடைபெற கூடிய அதிரை எக்ஸ்பிரசின் இணைய வழி இஸ்லாமிய கேள்வி பதில் போட்டியில் அனைவரும் பங்கேற்க வேண்டும் என அழைப்புவிடுத்தார். மேலும் ஒவ்வொருவரும் இஸ்லாமிய மார்க்க அறிவை பெருக்கி கொள்வதோடு பிறருக்கும் அதனை எடுத்து சொல்ல வேண்டும் என அவர் கூறினார்.