52
ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தின் இளைஞர் அமைப்பிற்கான நிர்வாகிகளை ஷம்சுல் இஸ்லாம் சங்க தலைவர், நிர்வாகிகள் மற்றும் முஹல்லா வாசிகளின் ஆலோசனைப்படி தேர்வு செய்தார்கள். அதன்படி இளைஞர் அமைப்பின் தலைவராக Z.முகம்மது தம்பி, செயலாளராக S.நஜ்முதீன், பொருளாளராக M.R.முஹம்மது சாலிஹ், துணை தலைவராக M.F.சலீம், துணை செயலாளராக A.முஹம்மது மாகிர் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். முஹல்லாவின் மேம்பாட்டிற்கு தேவையான நலதிட்டங்கள், இளைஞர்களின் முன்னேற்றத்திற்கான பல நலத்திட்டங்கள் கொண்டுவரப்படும் என புதிய நிர்வாகிகள் வாக்குறுதி அளித்துள்ளனர்.