அதிரை எக்ஸ்பிரஸ்:- தஞ்சாவூர் மாவட்டம்,அதிரை 21வது வார்டு சாலையில் பிரமாண்ட பள்ளம் ஏற்பட்டுள்ளது.
அதிராம்பட்டினம் பேரூராட்சியில் அமைந்துள்ள 21வது வார்டு சித்திக் பள்ளிக்கு எதிரே அமைந்துள்ள சந்து பகுதியில் மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது.பள்ளத்தை தற்சமயம் கான்கீரீட் போடுவதற்கு பயன்படுத்தும் மரத்திலான பலகையை கொண்டு அப்பகுதி மக்கள் மூடிவைத்துள்ளனர். சாலைப்பகுதியில் நடப்பதற்கு பள்ளி மாணவ,மாணவிகள், பெண்கள் போன்றோர் மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனர்.இதனை உடனடியாக பேரூராட்சி நிர்வாகம் துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு பள்ளத்தை சரி செய்திட வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் கோரிக்கையாக இருக்கிறது.
இதுகுறித்து சமூக ஆர்வலர் பைசல் நம்மிடம் தெரிவிக்கையில் அதிரையில் பெரும்பாலான சாலைகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளது.மேலும் தெருவிளக்குகள் சரிவர எரிவதில்லை.அதிரையில் வசிக்க கூடிய அத்தனை பேரும் அண்மைகாலமாக திருடர்களின் தொடர் கைவரிசையால் அச்சத்தில் உள்ளனர்.அதிரையை பொறுத்த வரை ஒட்டு மொத்தமாக பேரூராட்சி, காவல்துறை என அத்தனை அரசு துறைகளும் செயல் இழந்துவிட்டதாகவும் குற்றஞ்சாட்டினார்.