59
அதிராம்பட்டினம் நகராட்சி மன்ற தேர்தலில் வெற்றி பெற்ற MMS தாஹிரா அம்மாள் அப்துல் கறிம் போட்டியின்றி சேர்மன் ஆனார்.
துணை சேர்மனாக நகர செயலாளர் இராம குணசேகரன் துணை சேர்மனாக இருந்து நகர பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் அதிராம்பட்டினம் நகர் மன்ற தேர்தலில் வெற்றி பெற்ற தலைவர் துணை தலைவரை மரியாதை நிமித்தம் பலரும் சந்தித்து வருகிறார்கள்.
அந்த வகையில் பட்டுக்கோட்டை நகர ஜமாத்தார்கள்,ரயிலடி பள்ளி நிர்வாகிகள் உள்ளிட்ட நிர்வாகிகள் இன்று நகர சேர்மன் MMS தாஹிரா அம்மாள் அப்துல் கறிம் மற்றும் துணை தலைவர் இராம குணசேகரனை சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்தினர்.