

அதிராம்பட்டினம் தொழிலதிபர் ஹாஜி சிஹாபுதீன் முயற்சியில் நகராட்சி மன்றம் அனுசரணையுடன் இன்று செல்லியம்மன் கோவில் திருமண மண்டபத்தில் திடக்கழிவு மேலாண்மை குறித்த விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது.
இந்த நிகழ்வில் நகராட்சி ஆணையர் சசிகுமார் தலைமையில் நகர சேர்மன் MMS தாஹிரா அம்மாள் அப்துல் கறிம் மற்றும் துணை தலைவர் இராம குணசேகரன் முன்னிலையில் நடந்தன.
இவ் விழிப்புணர்வு நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்களாக, சுற்று சூழல் மன்றம் 90.4 சார்பில் ஹாஜி சிகாபுதீன், உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் குப்பை குறித்த விழிப்புணர்வை திருப்பூர் பாதுகாப்பு இயக்கத்தின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டு திடக்கழிவு மேலான்மை, சுத்திகரிப்பு உள்ளிட்ட விழிப்புணர்வு குறித்து விள்க்கமாக எடுத்துறைத்தனர்.
இந்த நிகழ்வில் திமுகவின் நகர நிர்வாகிகள்,ஒன்றிய சிறுபான்மையினர் அணியின் மரைக்கா கே இதிரீஸ் அஹமது உள்ளிட்ட கவுன்சிலர்கள்,பொதுமக்கள் துப்புரவு தொழிலாளர்கள என நூற்று கணக்கானோர் கலந்து கொண்டனர்.