66
அதிரை நகரில் உள்ள மாற்றுத்திறனாளிகள் குறித்த கணக்கெடுப்பு பணிக்கான கால அவகாசம் மேலும் 10 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் மாற்றுத்திறனாளி அடையாள அட்டை வைத்திருப்போர், அடையாள அட்டை இல்லாதோர் என அனைவரும் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு அரசின் மேம்பாட்டு திட்டம், நலத்திட்ட உதவிகள் கிடைத்திட இந்த கணக்கெடுப்பு பேருதவியாக இருக்கும். இந்நிலையில், அதிரையில் தங்களுக்கு தெரிந்த மாற்றுத்திறனாளிகள் குறித்த தகவல்களை +91 9500293649, +91
7200364700 என்ற தொலைப்பேசி எண்ணை தொடர்புக்கொண்டு தெரிவிக்கும் பட்சத்தில் அரசு பணியாளர்கள் அவர்களின் வீட்டிற்கே நேரில் சென்று கணக்கெடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.