புதிதாய் பிறந்தோமா!!!
காலை வெயிலை துணையாக கொண்டு
என் கால்களை
அடி எடுத்து வேகமாக
நடந்தேன்.
வயல் வெளியில்
இளம் கன்னியர்கள்
ஏறு பூட்டி உழுதார்கள்
கண் கொட்டாமல் பார்த்த நான் என்னையே கில்லி கொண்டேன்….நம்ப முடியவில்லை.. கனவா நினைவா..
நினைவு தான் …இப்போது தான் புரிந்து போனது…வேளாண்மை கல்லூரியில் படிக்கும் பெண்களின் விவசாய செயல் திறன் அறிதல் ஒத்திகை…
விவசாயம் மறந்தோமா…இல்லை இன்று தான் பிறந்தோமா..என்று கேட்க தூண்டியது அந்த காட்சியின் மூலம். நன்று நாம் மறக்கவில்லை விவசாயி சேற்றில் கை வைத்தால், சோற்றில் கை வைக்கமுடியும். புதிதாய் பிறந்த அனுபவம்.