தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் பேரூராட்சியின் மெத்தனப்போக்கால் சிஎம்பி லைன் பகுதி 21வது வார்டு தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு மாதமும் இந்த 21 வது வார்டில் ஏதாவது குறைபாடுகள் நிகழ்ந்த வண்ணமே இருக்கிறது. அதில் ஒன்று தான் தெரு மின் விளக்குகள் பேரூர் நிர்வாகத்தின் சரிவர பராமரிப்பின்றி பழுதடைந்து கும்மிருட்டாக அவ்வப்போது காட்சியளிக்கிறது.
இதன் காரணத்தினால் பல திருட்டுகளும், வழிப்பறி செயல்களும் இரவு நேரங்களில் அரங்கேறி வருகிறது.
இது பற்றி 21 வார்டு பொதுமக்கள் அதிரை பேரூர் நிர்வாகத்திடம் பலமுறை மனு கொடுத்தும் செவி மடுக்காமல் இருந்து வருகிறது.
திருடர்களின் புகழிடமாக அதிரை மாறுவதற்குள் பேரூராட்சி தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த கோரிக்கையாவது அதிரை பேரூராட்சி செவிமடுக்குமா என்பதனை பொறுத்திருந்து பார்ப்போம்.