60
அதிராம்பட்டினம் பேருந்து நிலையம் அருகில் உள்ள துர்கா செல்லியம்மன் ஆலயத்தில் 42 ஆம் வருட திருவிளக்கு பூஜை வியாழக்கிழமை மாலை 6 மணியளவில் நடைபெற்றது.
இங்கு வருடா வருடம் திருவிளக்கு பூஜை நடைபெறுவது வழக்கம் .ஆனால் இரண்டு ஆண்டுகாலமாக கொரோனா காரனமாக விளக்கு பூஜை நடைபெறாமல் இருந்தது.
இதனையடுத்து இந்த வருடம் 1008 திருவிளக்கு பூஜை நடைபெற்றது .
நீண்ட நாட்களுக்கு பின்னர் நடைபெற்ற விளக்கு பூஜையில் பெண்கள் ஆர்வமுடன் வந்து கலந்து கொண்டனர்.