Home » எப்போ சார் நோம்பு முடியும்? இளைஞர்களின் அட்டூழியம் தாங்க முடியல – ஆதங்கப்படும் அதிரை காவல் துறை –

எப்போ சார் நோம்பு முடியும்? இளைஞர்களின் அட்டூழியம் தாங்க முடியல – ஆதங்கப்படும் அதிரை காவல் துறை –

by
0 comment

ரமலான் மாதம் தொடங்கி இன்றுடன் 14நோன்புகள் கடந்து விட்டது.

ரமலான் காலங்களில் இரவு வணக்க வழிபாடுகளில் இஸ்லாமியர்கள் அதிகளவில் ஈடுபடுவது வழக்கம்.

இதன் காரணமாக வணக்கஸ்தர்களின் தேவைக்காக அங்காங்கே இரவு நேர கடைகள் செயல்படுகிறது.

பெரியவர்கள்,பெண்கள் என அனைவரும் வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவர்.

இதனை சாதகமாக பயன்படுத்தி கொண்ட சில இளைஞர்கள் கூட்டாக சேர்ந்து ஊர் சுற்றுவது வாடிக்கையாக உள்ளது.

அதன்படி இன்று நள்ளிரவு ஊர் சுற்றிய சில இளைஞர்கள் சேது சாலையில் சென்ற சரக்கு வாகனத்தை வழிமறித்ததாக கூறப்படுகிறது.

அப்போது அவ்வழியாக சென்ற ஒருவர் அந்த இளைஞர்களை அப்புறப்படுத்தி வாகனம் செல்ல வழிவகை செய்துள்ளார்.

இதனிடையே அவ்வழியே வந்த நெடுஞ்சாலை காவல் துறையினர் அந்த இளைஞர்களை எச்சரித்து அனுப்பியுள்ளனர்.

சம்பவத்தை கேள்வியுற்ற அதிரை எக்ஸ்பிரஸ் நிருபர் சம்பவ இடத்திற்கு வரைந்துள்ளார் அப்போது அங்கு நின்றிருந்த காவல்துறை அதிகாரி ஒருவர் எப்ப சார் நோம்பு முடியும் என எரிச்சலோடு கேட்டுவிட்டு கடந்தார்.

அன்பான் அதிரை உறவுகளே… ரமலான் காலங்களில் நல் அமல்களில் ஈடுபடும் நாம் நமது பிள்ளைகள் எங்கு செல்கிறார்கள் எதற்கு செல்கிறார்கள்,யாருடன் செல்கிறார்கள் எங்கெல்லாம் செல்கிறார்கள் என கன்கானிப்பது அவசியமாகிறது.

அப்படி அடங்காத பிள்ளைகளை, தேவையில்லா நேரங்களில் வெளியிடம் சுற்றவிடாமல் வீட்டிலேயே பாதுக்காப்பது அவசியம்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter