தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தில் மிகவும் குறைந்த கட்டணத்தில் ஆட்டோ சேவை வழங்கும் ஆட்டோ ஓட்டுனர்.
எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை தினமும் உயர்த்தி வருவதன் காரணமாக அத்தியாவசியமான அனைத்தின் விலையும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே இருக்கிறது.அதிரையில் பெரும்பாலான மக்கள் பல்வேறு வகையில் அதிகளவில் பயன்படுத்தும் ஒரு வாகனம் தான் ஆட்டோ.
அப்படியிருக்கையில் அதிராம்பட்டினம் நடுத்தெருவை சேர்ந்த யூசுப் அவர்கள் அதிரை மக்களுக்கு மிக குறைந்த கட்டணத்தில் சவாரி செய்துவருகிறார்.தன்னுடைய ஆட்டோ பின்புறத்தில் எந்தந்த இடங்களுக்கு எவ்வளவு கட்டணம் என்பதை பேனரும் வைத்துள்ளார்.
இந்த குறைந்த கட்டண ஆட்டோ அதிரை பொதுமக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.