56
திருத்துறைப்பூண்டி அதிராம்பட்டினம் பட்டுக்கோட்டை மார்க்கமாக காரைக்குடி- மாயவரம் டெமு இன்றுகாலை திருத்துறைப்பூண்டியை கடந்து சென்று கொண்டிருந்த போது டெமு ரயில் முன் திடீரென ஒருவர் குதித்ததாக கூறப்படுகிறது.
இதனால் அந்த அடையாளம் தெரியாத நபர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
சம்பவம் குறித்து ரயில் ஓட்டுனர் ரயில்வே பாதுகாப்பு படையினருக்கு தகவல் கொடுத்துள்ளார், தகவலின் பேரில் விரைந்து சென்ற ரயில்வே போலிசார் பிரதேத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டு இறந்த நபர் யார் எந்த ஊரை சார்ந்தவர் என விசாரித்து வருகின்றனர்.