தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் அமைந்துள்ள பிரசித்தி பெற்று விளங்கக் கூடிய ஸ்ரீ நாடியம்மன் கோயில் திருவிழா கடந்த இருபத்தி ஒன்பதாம் தேதி காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் தொடங்கியை.
அதனைத் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வந்தது.
இந்நிலையில் தேரோட்ட நிகழ்ச்சி அதி விமரிசையாக நடைபெற்றது. தேரடியில் இருந்து புறப்பட்ட தேர் மார்க்கெட், தபால் நிலையம் வந்து மணிகூண்டு வந்தடைந்தது.
இந்த தேரோட்டம் நிகழ்ச்சியை ஒட்டி தீயணைப்பு வண்டி மற்றும் நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் விழாவில் க்லந்து கொண்டனர்,பக்தர்களின் வசதிக்காக கோவில் நிர்வாகம் சிறப்பான ஏற்பாடுகளை செய்துள்ளதாக பக்தர்கள் தெரிவித்தனர்.