அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள Fairfield மஸ்ஜித் அல் நூர் பள்ளிவாசலில் அமெரிக்கன் அதிரை போரம் சார்பில் இஃப்தார் ஏற்பாடு செய்தனர். இதில் அதிரையர்கள் உட்பட அனைத்து தரப்பினரும் பங்கேற்றனர். பின்னர் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் அமெரிக்கன் அதிரை போரம் அமைப்பின் துணை தலைவர் இப்ராகிம் மீரான், செயலாளர் அப்துல் ரவூப், முன்னாள் தலைவர் சிப்லி, முன்னாள் செயலாளர்கள் நஜ்முதீன், சலீம் உள்ளிட்ட அதிரையர்கள் பங்கேற்று ஊரின் மேம்பாடு மற்றும் வளர்ச்சி குறித்து ஆலோசனை நடத்தினர்